வேண்டும் வேண்டும் விவேகம் வேண்டும்!
சித்தர் ஒருவர் மலைப்பகுதியில் பல காலம் வாழ்ந்து வந்தார். அவரிடம் சில சீடர்களும் இருந்தனர். மேலும் அவரிடம் சீடராக சேர்வதற்காக மூன்று சீடர்கள் அவரை தேடி வந்தனர். அந்த சித்தரிடம் சீடராக சேர வேண்டுமென்றால் அவர் சில சோதனைகளை வைத்து அதில் வெற்றி பெறுபவர்களை அவர் சீடராக ஏற்றுக் கொள்வார். அந்த வகையில் அவரிடம் சீடராக சேர்வதற்காக வந்த மூன்று சீடர்களையும் மூன்று நாட்கள் கழித்து வருமாறு அந்த சித்தர் தனது சீடரிடம் கூறி அனுப்பினார். அதன்படி அந்த சீடரும் அந்த மூன்று நபர்களை மூன்று நாட்கள் கழித்து வருமாறு சொல்லி அனுப்பிவிட்டார்.
மூன்று நாட்கள் கழிந்த நிலையில் அந்த மூன்று சிறுவர்களும் மீண்டும் அந்த சித்தரை சந்தித்து சீடராக இணைவதற்கு வந்தனர். அந்த சித்தரும் தனது காதில் ஓணான் புகுந்து காதின் உள்ளே இறந்துவிட்டதாகக் கூறுமாறு சொல்லி அனுப்பினார். அந்த சீடரும் அவ்வாறே அந்த மூன்று நபர்களிடம் கூறினார் அதில் முதல் நபர் ஓ அப்படியா எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்று சொல்லிவிட்டார். இரண்டாம் நபர் சித்தரின் கடந்த காலத்தில் செய்த பாவச் செயல்கள் தான் இவ்வாறு நடந்து இருக்கும் என்று இரண்டாம் நபர் கூறினார். மூன்றாவது நபரோ சற்று வித்தியாசமாக ஒரு சித்தரின் காதில் ஓணான் புகுந்து இறந்த செய்தியை அவரால் முழுமையாக நம்ப முடியவில்லை ஏனென்றால் அந்த சித்தர் இறந்த செய்தி அவருடன் பணியாற்றிய சிலருக்கு சிறிதுகூட மனக் கவலை இல்லை அதுமட்டுமில்லாமல் காதினுள் ஊற்றுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை அவ்வாறு செல்லவும் முடியாது என சிந்தித்து சரியான விடையை கூறினான் மூன்றாவது நபர் எனவே அந்த மூன்றாவது நபரையே அந்த சித்தர் தன் சீடராக தேர்ந்தெடுத்தார்.
எனவே இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது வேகம் இருந்தால் மட்டும் போதாது விவேகம் நிச்சயம் இருக்க வேண்டும் என்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.