School Reopen Date

School Reopen Date


    ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் ஜனவரி 2ம் தேதி நடப்பதால் அன்று நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்று விட்டு மறுநாள் ஜனவரி 3 ஆம் தேதி காலை பள்ளிக்கு செல்வதில் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு முறை எண்ணிக்கை என்பதால் நீண்ட நேரம் பிடிக்கும் என்பது கருத்து எனவே நல்லிரவு வரையிலும் வாக்கு எண்ணிக்கை தொடரும் என்பதால் ஆசிரியர்கள் சிரமத்தை அளித்துள்ளனர் இதை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பை ஒரு நாள் ஒத்திவைக்குமாறு தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன தமிழகத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு ஜனவரி 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது இந்நிலையில் இந்த வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது வாக்கு எண்ணிக்கை இரண்டாம் தேதி காலை தொடங்கி நள்ளிரவு வரை நடக்க வாய்ப்பு உள்ளது இதில் பங்கேற்கும் ஆசிரியர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் ணர் ஜனவரி 2-ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை முடித்து அதில் பங்கேற்ற ஆசிரியர்கள் வீடு திரும்புவதற்கு நள்ளிரவு ஆக வாய்ப்புள்ளது மறுநாள் காலை மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது முந்தைய நாள் அதிகாலை 5 மணி முதல் அடுத்த நாள் முழுவதும் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்றுவிட்டு நள்ளிரவு வீடு திரும்பி மறுநாள் பள்ளிக்கு மீண்டும் செல்வது மிகுந்த சிரமம் ஏற்படும் என்றும் மறுநாள் மூன்றாம் தேதி முதல் மறுநாள் என்பதால் அன்று விடுமுறை எடுக்க முடியாது என்பதால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 


   இதையடுத்து தேர்தல் ஆணையம் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தால் பரிசீலனை செய்யப்படும் என்று கூறியுள்ளனர் பள்ளி திறப்பை மேலும் ஒருநாள் ஒத்திவைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுப்பது குறித்து மாநில தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது ஆசிரியர்கள் கோரிக்கை முறைப்படி அறிவிக்கப்பட்டது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Join our Telegram group click here to Join
*     KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்
* தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை kalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு 
KALVI IMAYAM  எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
தேவையற்ற பதிவுகளை நீக்க KALVI IMAYAM வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.