ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியிலேயே பொதுத் தேர்வு எழுதலாம் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
0Kalvi ImayamJanuary 21, 2020
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியிலேயே பொதுத் தேர்வு எழுதலாம் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
2019-20 ஆம் கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது இந்நிலையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் வேறு பள்ளியில் பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை பரவலாக இருந்து வந்தது அது தற்போது பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயிலும் அதே பள்ளியில் பொதுத் தேர்வு எழுதலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது வேறு பள்ளிக்கு சென்று தேர்வு எழுத வேண்டும் என்ற தேவைஇல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் 20 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் மட்டும் அதாவது ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் 20 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் மட்டும் அருகில் உள்ள பள்ளிகளில் தேர்வு எழுத வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது மாணவர்கள் நலன் கருதி அதே பள்ளியில் தேர்வு எழுத பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.