10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்த்து வழக்கு

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Class 1 to 12 All Important Single Page Study Materials Click Here 


    நாடு முழுவதும் பரவும் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பை உறு திப்படுத்தாமல் 10-ஆம் வகுப்பை பொதுத்தேர்வை நடத்தக்கூடாது என தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் இரு மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


    சென்னை உயர்நீதிமன்றத்தில் இளங்கோவன் என் பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், நாடு முழு வதும் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று முழுமையாக கட்டுப்படுத்த பட்டு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யா மல், இந்த பொதுத் தேர்வை நடத்தக்கூடாது என தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு உத் தரவிடவேண்டும் என கோரியிருந்தார்.


    பொதுத்தேர்வு எழுத 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் உள்ளனர் தேர்வு பணியில் ஈடுபட ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உள்ளனர் பாதிப்பு அதிகரித்து வரும் இந்த நிலையில் இது மிகவும் அபாயகரமான ஒன்றாகும்.

    இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராய ணன், அனிதா சுமந்த் ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது, அரசு தரப் பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞர் சி.முனு சாமி, இந்தியாவில் உள்ள 11 மாநிலங்களில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்கெனவே நடத்தி முடிக் கப்பட்டு விட்டது. தமிழகத்தில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப் படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தேர் வுகள் வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் ஜூன் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட் டுள்ளது தேர்வு நடைபெற உள்ள 12 ஆயிரத்து 600 தேர்வு

    Class 1 to 12 All Important Single Page Study Materials Click Here 

      மையங்களிலும், உலக சுகாதார அமைப்பின் வழி காட்டுதலின்படி கரோனா நோய்த் தொற்று பரவா மல் இருக்க தேவையான அனைத்து வழிகாட்டுதல் க ளும் தீவிரமாக பின்பற்றப்படும் என வாதிட்டார்.

      அப்போது புதுச்சேரி மாநில அரசு தரப்பில் ஆஜ ரான வழக்குரைஞர் ஸ்டாலின் அபிமன்யு இதுதொ டர்பாக பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார் .இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக தமிழக கம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் விரிவான பதி லளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசார ணையை ஜூன் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

      இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அது ஜூலை 15ஆம் தேதி நடைபெறுமா என்பது மீண்டும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் இடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினர் இடையே மீண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் ஜூன் 15ஆம் தேதி நடத்தக்கூடாது என கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

      Post a Comment

      1 Comments
      * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
      1. Its good one.10th public exam should conduct on when corina virus completely solve down.this is my opinion and my parents opinion

        ReplyDelete