பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா?

மே மாதம் சம்பளம் வழங்க வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டு 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர்.
நியமிக்கப்படும் போது பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்ற முழு சம்மதம் தெரிவிப்பதாக கையொப்பமிட்டு தான் பணியில் சேர்ந்தனர்.
அவ்வாறு பணியில் நியமிக்கப்படும் பொழுது 11 மாதத்திற்கு மட்டும் சம்பளம் வழங்கப்படும் மே மாதத்திற்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அரசாணையில் இடம் பெறவில்லை எனினும் மே மாதம் சம்பளம் பிடித்தம் செய்வது மிகுந்த வருத்தம் அளிப்பதாக கூறி வருகின்றனர்.
தற்போதைய ஊரடங்கு உத்தரவு காரணமாக மிகுந்த துயரத்தில் உள்ளனர் இந் நிலையில் மே மாதம் ஊதியம் ஆன 7 ஆயிரத்து 700 ரூபாய் வழங்க முதல்வர் ஆணையிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.