பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஓய்வு பெறும் நிலையில் அவர்களுக்கு மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் பல கோடி ரூபாய் மிச்சப்படுத்த முடியும் என ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அந்த கல்வியாண்டு இறுதி மாதமான மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்குவது வழக்கமான ஒன்று இந்த ஆண்டு வைரஸின் தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாத நிலையில் மே மாதம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டாம் என அரசு முடிவு செய்துள்ளது இதன் மூலம் பல கோடி ரூபாய் மிச்சப்படுத்த முடியும் என ஆலோசனை வழங்கப் பட்டதாக கூறப்படுகிறது.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தவிர மற்ற ஆசிரியர்களை பணி நீட்டிப்பு செய்ய வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.