அரசுப் பணிகளில் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பை மறுபரிசீலனைய தமிழ்நாடு ஆசிரியர் சங் கம் வலியுறுத்தியுள்ளது.

அரசுப் பணிகளில் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பை மறுபரிசீலனைய தமிழ்நாடு ஆசிரியர் சங் கம் வலியுறுத்தியுள்ளது.

 அரசுப் பணி ஓய்வு  வயதை 59-ஆக உயர்த்தியதை அரசு மறுபரிசீ லனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங் கம் வலியுறுத்தியுள்ளது.


இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் பி.கே.

இளமாறன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஆசிரியர், அரசு ஊழி யர்கள் பணி ஓய்வு வயது 58-இல் இருந்து 59 -ஆக மாற்றி ஓராண்டு நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளி விடப்பட்டுள்ளது

அரசாணையில், தமிழக அரசுப்பணியில் பணிபுரிந் துவரும் அலுவலர்கள், ஊழியர்கள் அரசுப் பள்ளி, கல்லூரிகள், பொது நிறுவன பணியாளர் அனைவருக் கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களுக்கு சாத கமாக அமைந்துள்ளது. தற்போது அகவிலைப்படி, ஒன்றரை ஆண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஓராண்டு நீட்டிப்பினால் ஓய்வூதியக் குறைவை ஈடு செய்யலாம். ஆனால், பல லட்சம் இளைஞர்கள் படித் துவிட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர்.

குறிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 70-ஆயிரம் பேர் வேலைக்காகக் காத் திருக்கும் நிலையில், அந்த எதிர்பார்ப்பு ஓராண்டு தள் ளிப்போகும். இதனால், அவர்கள் மேலும் பல பிரச் னைகளை எதிர்கொள்ள நேரிடும்; மனஉளைச்சலை யும் ஏற்படுத்தும்.எதிர்கால கனவுகளையும் கசக்கும்

எனவே, தமிழக அரசு பணியாளர்களின் ஓய்வு வயது 58 -லிருந்து 59 -ஆக உயர்த்தியதை மறுபரிசீலனை செய்ய ஆவன செய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங் கம் சார்பில் வலியுறுத்துகிறோம் என அதில் கூறியுள் ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.