There is no opening of Tasmac Shop in Chennai

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு இல்லை

சென்னை மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதி களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்திலேயே அதிகமாக வருவது தொடர் பாதிப்பு சென்னையில் உள்ளதால் சென்னையில் மதுபான கடைகள் தொடர்ந்து மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறி விப்பு:சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந் துள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் வரும் வியாழக்கிழமை திறக் கப்படமாட்டாது. இந்தக் கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப் படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 பல்வேறு மண்டலங்களைக் கொண்டு பாஸ் மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதில், சென்னை மண்டல மானது சென்னை வடக்கு, சென்னை மத்தியம், சென்னை தெற்கு, திரு வள்ளூர் கிழக்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது

இதில், சென்னை தெற்கு மாவட்டத்தில் 101 கடைகள் மூலமாக நாளொன்றுக்கு ரூ.3 கோடியும், மத்திய மாவட்டத்தில் 99 கடைகள் வழி யாக ரூ.4 கோடியும், வடக்கு மாவட்டத்தில் 111 கடைகள் வழியாக ரூ.3 கோடி அளவுக்கும் வருவாய் கிடைத்த சென்னை மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட கடைகள் மூடப் பட்டிருக்கும் என்ற அறிவிப்பு காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூர், மாதவரம், திருவொற்றியூர் வரையிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் கானாத்தூர், வண்டலூர் ஆகிய பகுதிகள் வரையிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது. எனவே, சென்னை மாநகரம் டன் இணைந்த 311 கடைகளுடன் கூடுதலாக புறநகர்ப் பகுதிகளிலுள்ள சுமார் 300 கடைகளும் என மொத்தம் 600 முதல் 650 கடைகள் வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட கடைகள் மூடப்பட்டிருப்பதால் நாளொன்றுக்கு ரூ.15 கோடி வரையில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று அந்த நிறு வன வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.