Incentive for 12th students.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வங்கிக் கணக்கை பதிவு செய்ய உத்தரவு 

 பள்ளிக்கல்வித்துறை சார்பில் இடைநிற்றலை தவிர்க்கும் வகை யில் பிளஸ்-2 வகுப்பை படித்து முடிக்கும் மாணவர்களுக்கு கடந்த 2011-12-ம் கல்வியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் பிளஸ்-2 வகுப்பை முடித்த மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அவர்களின் வங்கி கணக்கு சமர்ப்பிக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி பள்ளிகளில் இந்த ஆண்டு பிளஸ்-2 முடித்த 5 லட்சத்து 35 ஆயி ரத்து 82 பேருக்கு ரூ.107 கோடி பள்ளிக் கல்வித் துறையால் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சம்பந் தப்பட்ட பள்ளிகள் பெற்று, பள்ளிக்கல்வித் துறையின் கல்வி யியல் மேலாண்மை தகவல் மையத்தில் (இ.எம்.ஐ.எஸ்.) பதி வுசெய்ய உத்தரவிட்டு இருந்த நிலையில், இதுவரை 1லட்சத்து 69 ஆயிரத்து 108 மாணவர்களின் விவரங்கள் மட்டுமே அதில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், விரைந்து மற்ற மாண வர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்யவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.