Instructions to CEOs and All HMs

பொருள் : அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை -6 - மார்ச் / ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் நடத்தப்படாமல் விடுபட்ட மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - இரத்து செய்யப்பட்டது பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாட்களை ஒப்படைத்தல் - அறிவுரை வழங்குதல் சார்பு பார்வை: அரசாணை (நிலை) எண்.54, பள்ளிக்கல்வி (அதே) துறை, நாள்.09.06.2020.

பார்வையில் காணும் அரசாணையில், 2019-2020 ஆம் கல்வியாண்டில் பத்தாம்

வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களான வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் (புதிய பாடத்திட்டம்) வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் மற்றும் தொழிற்கல்வி கணக்குப்பதிவியல் (பழைய பாடத்திட்டம்) ஆகியவற்றிகான தேர்வுகள் இரத்து செய்யப்படுகிறது என்று மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப் பதிவின் அடிப்படையில் 20% மதிப்பெண்களும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட அரசாணையின்படி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளை எழுதுவதற்கு பதிவு செய்த மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80% மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்

எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை/மேல்நிலை பள்ளி தலைமையாசிரிர்களுக்கும் பின்வரும் அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

For more details click here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.