கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்
மத்திய அரசு உறுதி
கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லைப் பகு தியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பிராந்தி யம் முழுவதும் சீனாவுக்கு சொந்தம் என்று அந் நாடு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், வெளியு றவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது அனுராக் ஸ்ரீவாஸ்தவா கல்வான் பள்ளத்தாக்கு தொடர்பான நிலைப்பாட்டில் எந்த வொரு மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் சீனா தன்னுடைய பழைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விட்டது. அந்நாடு தற்போது கல்வான் பள்ளத்தாக்கு முழுவதற்கும் உரிமை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது
இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பகுதிகள் இந்திய ராணு வத்தினருக்குத் தெளிவாகத் தெரியும். அந்தப் பகுதிகளில் பல ஆண் டுகளாக அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் அத்துமீறி ஊடுருவ சீன ராணுவத்தினர் கடந்த மே மாதம் முதல் முயற்சித்து வருகின்ற னர். அவர்களின் முயற்சிக்கு இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். எல்லைப் பகுதியில் அமைதியையும் ஸ்திரத்தன்மை யையும் ஏற்படுத்த இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஒப் புக் கொண்டுள்ளனர்
அதை உறுதியுடன் கடைப்பிடிக்க சீனா உரிய முயற்சிகள் மேற் கொள்ளும் என நம்புகிறேன் என்றார் அனுராக் ஸ்ரீவாஸ்தவா