10-ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வு முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சென்ட் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதல்வர் அறிவித்தார்.
இதன்பிறகு தேர்வுக்கு வராத மாணவர்களை எப்படி தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் மாணவர்கள் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட அனைவரையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதால் ஜூன் 19ஆம் தேதி தேர்வுத்துறை இயக்குனர் ஒரு உத்தரவை வெளியிட்டிருந்தார்.

தேர்வுகளை எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட வேண்டும்
இந்நிலையில் தற்போது காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை முழுமையாக எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட வேண்டும் என தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரு சுற்றறிக்கையை தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டிருக்கிறார். அந்த சுற்றறிக்கையில், பத்தாம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை முழுமையாக எழுதாத மாணவர்களுக்கு பதிவேட்டில் ஆப்சென்ட் போட வேண்டும் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே தெளிவாக அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்த பிறகு தற்போது தேர்வு எழுதாத மாணவர்கள் ஆப்சென்ட் போட வேண்டும் என்று உரிய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என தேர்வு துறை இயக்குனர் தெரிவித்தது ஏன் ? என்று தெரியாமல் ஆசிரியர்கள். குழப்பம் அடைந்திருக்கிறார்கள். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்.
- தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Sudhan
ReplyDelete