கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், ஐ.ஐ.டி. என்.ஐ.டி. மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வும், மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘நீட்‘ நுழைவுத்தேர்வும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது
மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து இன்றைக்குள் (ஜூலை 3) பரிந்துரைகளை வழங்க தேசிய தேர்வு முகமை உள்ளிட்ட அமைப்புகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியிருந்தது.
அதனடிப்படையில், நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- நீட் தேர்வு - செப்டம்பர் 13, 2020
- JEE main தேர்வு - செப்டம்பர் 1-6, 2020
- JEE Advanced தேர்வு - செப்டம்பர் 27, 2020
- KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்.
- தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.