TODAY EDUCATIONAL NEWS 10/08/2020
10ம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் 5177 மாணவர்கள் என்ன ஆனார்கள்?
10ம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் 5177 மாணவர்கள் விடுபட்டது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் வராத காரணத்தால் 10ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. இதன் படி இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வுக்கு முன்பு 9,45,006 மாணவர்கள் தேர்வு எழுதுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இன்று வெளியான தேர்வு முடிவில் 9,39,829 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், மீதி 5177 பேர் என்ன ஆனார்கள் என்ற கேள்வி எழுந்தது. இந்த ஆண்டு தேர்வு எழுதப் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 45 ஆயிரத்து 77. இதில், 231 பேர் தேர்வு எழுதப் பதிவு செய்ததற்கு பின்னர் இயற்கை எய்தியுள்ளனர். 658 பேர் மாற்றுச் சான்றிதழ் பெற்று பள்ளியிலிருந்து நின்றுவிட்டனர். 4359 பேர் காலாண்டு, அரையாண்டு தேர்வில் ஒரு பாடங்களைக் கூட எழுதவில்லை. இதனால், 5248 பேரை கழித்துவிட்டு 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளது. இதன் மூலம் காலாண்டு, அரையாண்டில் ஒரு பாடம், இரண்டு பாடம் தேர்வு எழுதாத மாணவர்கள் கூட தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது தெளிவாகிறது.இப்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பே கிடையாது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படும் நிலையிலும், பள்ளிகளை திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. சமீபத்தில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என தகவல்கள் வெளியானது. ஆனால் பள்ளிக் கல்வித்துறை அதற்கு மறுப்பு தெரிவித்தது. இப்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பே கிடையாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.மாணவர்களுக்கு தேர்வு நடத்தியே ஆக வேண்டிய சூழல் யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பொது போக்குவரத்து, பள்ளிகள் திறப்பு குறித்தும் பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றால் 62,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 22,15,075ஆக உயர்ந்துள்ளது. 15,35,744 பேர் குணமடைந்துள்ள நிலையில், 6,34,945 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் முதன்முறையாக இந்தியாவில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 44,386 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ள கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும் என யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாமல் உள்ளதால் கல்லூரி காலம் முடிந்தும் பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் முந்தைய மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு தேர்ச்சி வழங்க மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த உச்சநீதிமன்ற விவாதத்தில் யுஜிசி தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது. ஆனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தியே ஆக வேண்டிய சூழல் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் யுஜிசியின் கொள்கைகளை மாநில அரசுகளால் மாற்ற முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.