அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு முதல் பருவ பாடப் புத்தகத்தை பள்ளி தலைமை ஆசிரியா் மா.பழனி வழங்கினாா். இதில் பள்ளி மாணவா்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியில் நின்று புத்தகங்களை பெற்றுச் சென்றனா். மேலும் அனைத்து மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் பாடங்களை கவனிக்கவும், பாடப் புத்தகங்களில் வாசித்தல் மேற்கொள்ள மாணவா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இருமொழி கொள்கையே தொடரும்...
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதில் பேசிய அவர் 'மத்திய அரசு மும்மொழி கொள்கையை புதிய கல்வி திட்டத்தின் மூலம் கொண்டு வருவது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் மும்மொழி கொள்கையை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும்' என உறுதியாக தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள்
கல்வியில் பின் தங்கி கூடிய அபாயம்
கொரோனா பரவல் காரணமாக முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளில் பட்ட மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் படித்து வந்தனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட காலமாக கல்வி கற்காமல் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இருப்பதால் அவர்கள் கல்வியில் பின் தங்கி கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளில் பட்ட மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் படித்து வந்தனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட காலமாக கல்வி கற்காமல் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இருப்பதால் அவர்கள் கல்வியில் பின் தங்கி கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
10 தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாக வகுப்புகள்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு 2 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு 10 தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாக, இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுடைய கல்வித் திறன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன.
அரசு பள்ளியை பொறுத்தவரையில் ஏற்கனவே கல்வித் தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து மாணவர்களுக்கு இதன் பலன் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில், பாலிமரின் சஹானா தொலைக்காட்சி உள்ளிட்ட 10 தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாக வகுப்புகள் தொடங்கியுள்ளன.
- KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்.
- தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.