இன்று இந்தியாவிற்கு மட்டும்
சுதந்திர தினம் இல்லைங்க......
ஆகஸ்ட் 15ம் தேதியன்று இந்திய மக்கள் ஒவ்வொரும் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால், இன்று இந்தியாவிற்கு மட்டும் சுதந்திர தினம் இல்லைங்க, இன்னும் பிற நாடுகளும் கூட ஆகஸ்ட் 15 தான் சுதந்திர தினம்.
இந்தியா மட்டுமின்றி இன்னும் பிற நாடுகளும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, பலரின் உயிர் தியாகங்களுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் இந்தியா சுதந்திரத்தை அடைந்தது.
நம் இந்தியாவைப் போலவே காங்கோ, கொரியா, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை பெற்றுள்ளதுதான் சுவாரஸ்யமான ஒன்று.
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் கொரியா ஜப்பானிடமிருந்து விடுதலை பெற்றது. 1960 ஆம் ஆண்டு காங்கோ பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றுள்ளது. தொடர்ந்து 1971 ஆம் ஆண்டு பஹ்ரைன் இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்றுள்ளது.