நீட் ,ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்க்கோரி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
Free Online Test Click Here
All New TN Text Book 2020 Click Here
12th STD Click Here
11th STD Click Here
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு வகையானதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. அதைப் போல, நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.இதனை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதன் பின் மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.எனவே உச்சநீதிமன்றத்தில் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது, மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். தேர்வு நடத்தும் முடிவில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்து விடும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
Free Online Test Click Here
All New TN Text Book 2020 Click Here
12th STD Click Here
11th STD Click Here
10th STD Click Here