ஆன்லைன்' வகுப்பு விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி சென்னை,
நாடு முழுவதும் கருணா பாதிப்பின் காரணமாக 6 மாதங்களுக்கும் மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கான சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது அவற்றை ஒழுங்கான முறையில் வழிகாட்டு நெறிமுறைகள் உடன் நடைபெறுகின்றன ஹை கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன்' மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. இணை யதளங்களில் ஆபாச விளம்பரங்கள் வந்து செல்வதால் மாண வர்களின் கவனம் சிதறுவதாகவும், இதற்கு உரிய விதிகளை வகுக்கும் வரை, 'ஆன்லைன்' வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் தெரியும், 'ஆன்லைன்' வகுப்புகளுக்காக 'மொபைல்', 'லேப்டாப்' போன்றவற்றை தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, இதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட் டிருந்தன.
இந்தவழக்குகளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேம லதா ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நீதிபதி திகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத், தற்போது உலகம் முழுவதுமே 'ஆன்லைன்' மூலம் தான் வகுப்புகள் நடைபெறுகிறது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மலைப்பகுதியில் வசிக்கக்கூடிய குழந் தைகளுக்கு எப்படி'ஆன்லைன்' மூலம் வகுப்புகள் நடத்தப்ப டுகின்றன? வீடியோ பதிவு செய்து அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறதா? 'ஆன்லைன்' வகுப்புகளுக்கான விதிமு றைகளை பின்பற்றாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்று சரமாரியாக கேள்விகளை கேட்டு அதற்கு வருகிற 27-ந்தேதி விரிவாக பதிலளிக்க உத்தரவிட்ட னர்.
பல தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் கட்டணம் வசூலிக்கும் ஒரே காரணத்திற்காக ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் ஆன்லைன் வகுப்புகள் துவங்கி கட்டணம் வசூலித்து வருகின்றனர் பல தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒழுங்கான முறையில் ஊதியம் வழங்கப்படுகின்றன என்பதும் கேள்விக்குறியாக உள்ளது சில பள்ளிகளுக்கு அவர்கள் பெரும் ஊதியத்தில் பாதிக்கும் குறைவாகவே வழங்குகின்றனர் ஆனால் பெற்றோர்களிடமிருந்து ஆன்லைன் வகுப்பு என்ற போர்வையில் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர் இவற்றை கண்காணிக்கும் உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.
10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச ஆன்லைன் தேர்வுகள் நமது வலைதளத்தில் உள்ளது இவற்றை மாணவர்கள் பயன்படுத்தி தங்களை தேர்வுக்கு தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் பயனுள்ள வகையில் இருக்கும்பட்சத்தில் இவற்றைத் தங்கள் நண்பர்களுக்கு பகிருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.