11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படும்
இன்று முதல் +1 மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்படும் என புதுச்சேரி மாநில அரசு தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படும் என்று அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, தற்போது உள்ள சூழ்நிலைக்கு பள்ளி, கல்லூரிகளை திறக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். மேலும் கொரோனா தொற்றானது படிப்படியாக குறைந்ததும் மக்களின் கருத்துகளுக்கேற்ப சூழ்நிலையை பொறுத்து பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
10ஆம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 17 - 21 ஆம் தேதிவரை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 17 - 21 ஆம் தேதிவரை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும், மதிப்பெண்களில் குறைகள் இருந்தால் தலைமையாசிரியர் மூலம் அரசுத் தேர்வுகள் இயக்கத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை திறக்க தயார்.
ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை திறக்க தயார் நிலையில் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்குவங்கத்திலும் செப்டம்பர் 5 முதல் பள்ளி கல்லூரிகளை திறக்க மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்தால், நிச்சயம் செப்டம்பரில் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை, தற்போது உள்ள சூழ்நிலைக்கு பள்ளி, கல்லூரிகளை திறக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். மேலும் கொரோனா தொற்றானது படிப்படியாக குறைந்ததும் மக்களின் கருத்துகளுக்கேற்ப சூழ்நிலையை பொறுத்து பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.