தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு எப்போது தொடங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கோவையை சேர்ந்த பொறியாளர் எஸ்.பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "எனது மகன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். 11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையும் ஆகஸ்ட் 24ல் தொடங்க உள்ளதால், பள்ளி மாணவர்களை போல, தனி தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். மாணவர்களிடையே பாரபட்சம் காட்டுவதால், அவர்கள் ஒராண்டை இழக்க நேரிடும். தனித்தேர்வர்களின் முடிவுகளை வெளியிடும் வரை, மேல் நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கையையும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையையும் தள்ளி வைக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
காலாண்டு தேர்வுகள் எப்போது நடைபெறும்
ஆன்லைன் மூலம் தற்போது வகுப்புகள் நடைபெறும் நிலையில் காலாண்டு தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்ததாவது : கொரானா நோயின் தாக்கம் குறைந்து பின்னரே காலாண்டு தேர்வு குறித்த முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறினார். அரசுப் பள்ளி மாணவர்களிடம் நிர்வாகம் எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது. இதுவரை அரசு பள்ளிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர், 10, 12 மட்டுமின்றி 8,11 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறு தேர்வு எழுத வாய்ப்பு தரப்பட்ட உள்ளதாக அவர் கூறினார்.
NEET Exam Centers
நீட் தேர்வு நடப்பது உறுதியாகி விட்ட நிலையில், இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், தேர்வு நடத்தப்படும் மையங்கள் பற்றிய விவரங்கள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக தேசிய அளவில் நடத்தப்படும் பொதுத் தகுதி தேர்வை, கடந்தாண்டு வரை சிபிஎஸ்இ வாரியம் நடத்தி வந்தது. இந்தாண்டு முதல் முறையாக, இதற்காக 'தேசிய தேர்வு முகமை' என்ற தனி அமைப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு காரணமாக இந்தாண்டுக்கான நீட் தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இத்தேர்வை நடத்தக் கூடாது என்று உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதனால், நீட் தேர்வு தள்ளி வைக்கப்படுமா? ரத்தாகுமா? ஆன்லைன் மூலம் நடக்குமா? என்று பல்வேறு யூகங்கள் உலா வந்த நிலையில், இத்தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தேர்வுக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்கள், முன்கூட்டியே தங்களின் தேர்வு மையங்களை பற்றி அறிந்து கொள்வதற்கான வசதியை தேசிய தேர்வு முகமை செய்துள்ளது. தேர்வு நடக்கும் மையங்களின் விவரங்களை அது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மையங்கள் மற்றும் இதர தகவல்களை, தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in ஆகியவற்றில் அறிந்து கொள்ளலாம். ேமலும், நீட் தேர்வுக்கான அடையாள அட்டையும் விரைவில் வெளியிடப்படும் என்று தேர்வு முகமை கூறியுள்ளது.