Today Educational News 8/8/2020

பள்ளி, கல்லூரிகளை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் படிப்படியாக திறக்க அனுமதி தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதுவரை 3 கட்டமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை. இந்நிலையில், 4ம் கட்ட ஊரடங்கு தளர்வின் போது, பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பள்ளிகளை திறப்பதில் ஸ்விட்சர்லாந்து நாட்டின் பாணியை பின்பற்ற மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

  • இதன்படி, வகுப்புகள் 2 ஷிப்ட் முறையில் நடக்கும். ஒரு வகுப்பிற்கு 4 அமர்வுகள் இருந்தால், காலையில் 2 வகுப்புகளும், பிற்பகலில் 2 அமர்வுகளும் இடம் பெறும்.
  • காலை ஷிப்ட் காலை 8 முதல் 11 மணி வரையிலும், பிற்பகல் ஷிப்ட் 12 மணி முதல் 3 மணி வரையிலும் செயல்படும்.
  • ஒவ்வொரு ஷிப்ட்டிலும் 33 சதவீத ஆசிரியர்கள், ஊழியர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
  • 5ம் வகுப்பு வரை இப்போதைக்கு அனுமதி வழங்கப்படாது. 5ம் வகுப்பு வரையிலான குழந்தைகள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவது சிரமம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 1ல் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டாலும், முதல் 15 நாட்களுக்கு 10,11,12ம் வகுப்புகள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படும். அதன்பின், 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு அனுமதி தரப்படும்.


பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது?

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எந்த வகுப்பிற்கு, எப்போது நடைபெறும் என்பது குறித்து முதல்வர் வரும் 10ஆம் தேதி அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எந்த வகுப்பிற்கு எப்போது நடைபெறும். பாடப் புத்தகம், புத்தகப்பை மற்றும் ஷு வழங்குதல் குறித்த அட்டவணையை வரும் 10ஆம் தேதி முதல்வர் அறிவிக்க உள்ளார். தேர்வு எழுதாத நேரத்தில் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் பத்தாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெற்று பதினொன்றாம் வகுப்புக்கு செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.


10 -ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகின்ற 10 -ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்.10-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு  இணையதளங்களிலும், SMS மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


செப்டம்பர் 12ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம்.

அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் இணைந்த பொறியியல் கல்லூரிகளில், செப்டம்பர் 12ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் கல்வி குழுமத்தின் மூலம், ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகள் (முதல் செமஸ்டர் தவிர்த்து), பிஇ, பிடெக் படிப்புகளில்(பகுதி நேரம்) 3, 5, 7 செமஸ்டர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கும். கடைசி பணிநாள் அக்டோபர் 26ம் தேதி.செய்முறைத் தேர்வுகள் அக்டோபர் 28ம் தேதி தொடங்கும்.

  • KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.