செப்டம்பர்
1ம் தேதி முதல் நவம்பர்
14ம் தேதி வரையில் பள்ளிகளை
வெவ்வேறு கட்டங்களாகத் திறக்க மத்திய அரசு
ஆலோசித்து வருவதாக தகவல்
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அன்லாக் 3-யின் படி பள்ளிகளைத் திறப்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மார்ச் இறுதி முதல் ஊரடங்கின் காரணமாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஊரடங்கானது தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் தற்போது அன்லாக் 3 நடைமுறையில் உள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் இந்த அன்லான் 3 உள்ள நிலையில் செப்டம்பர் 1ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட உள்ளது. அதில், செப்டம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரையில் பள்ளிகளை வெவ்வேறு கட்டங்களாகத் திறக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
பள்ளிகள் நவம்பரில் திறக்கப்படும் என்பது வதந்தி
என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், தமிழகத்திலும் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்துமே அடைக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், பள்ளிகள் அனைத்தும் வருகின்ற நவம்பரில் திறக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால், நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்படுவது வதந்தி எனவும் பெற்றோர்களின் மன நிலையையும் கொரோனா பரவலையும் பொறுத்து பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என கூறியுள்ளார். செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகஸ்ட் இறுதியில் மத்திய அரசு வெளியிடும். இதனிடையே பள்ளிகள் திறக்கும் பட்சத்தில் சில முக்கிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. அவை பின்வருமாறு. வகுப்புகளை 2 ஷிப்டுகளில் நடத்தவும் பள்ளிகள் அறிவுறுத்தப்படும். ஒவ்வொரு ஷிப்டிலும் 33 சதவீத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருக்கலாம், காலை 8 மணியில் இருந்து 11 மணி வரை ஒரு ஷிப்ட், மாலை 3 வரை 2-வது ஷிப்ட் என வகுப்புகள் நடைபெறும். ஒவ்வொரு மாணவர்களுக்கும் இடையே 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை எந்த மாற்றமும் இல்லை.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிமைத்து வருகின்றன. சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனையாகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.63க்கும், டீசல் ரூ.78.86க்கும் விற்பனை செய்யப்படுகிறது.