College Re Open November 1
நவம்பர் 1 முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தியுள்ளது மத்திய கல்வித்துறை அமைச்சகம்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது.இந்நிலையில் கல்லூரிகள் & பல்கலைக் கழகங்களுக்கான முதலாண்டு வகுப்புகளை தொடங்குவதற்கான அட்டவணையை மத்திய கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.அதன்படி, 31.10.2020 க்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்து,01.11.2020 முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வுக்கு தயாராக அடுத்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை விடுமுறை ஆகும்.செமஸ்டர் தேர்வுகள் மார்ச் 8 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும்.செமஸ்டர் தேர்வுக்கு பின் மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும்.இதன் பின்னர் ஏப்ரல் 5 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். செமஸ்டர் தேர்வுக்கு தயாராக ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை விடுமுறை காலம் இருக்கும்.ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடைபெறும். ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 2வது செமஸ்டர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் கல்லூரி வகுப்புகள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.