அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி மற்றும் அதைத் தொடர்ந்து கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை கூட நடத்தாமல் அனைவரும் ஆல் பாஸ் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக மாநிலங்கள் முடிவெடுத்துக் கொள்ள மத்திய அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. சில மாநிலங்களில் ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்படுவது தொடர்பாக அறிவிக்கப்பட்டன.
இது தொடர்பாக சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் இப்போதைய சூழ்நிலையில் பள்ளி திறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.பள்ளி திறப்பு
ஆனால் இன்று தமிழக அரசு பள்ளிகள் திறப்பது தொடர்பாக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதை பாருங்கள்: அக்டோபர் 1ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலக் கூடிய மாணவ மாணவிகள் தங்கள் விருப்பத்தின் பெயரில் பள்ளிக்கு வரலாம்.
பாடங்களில் சந்தேகம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படுகிறது. பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்க பள்ளிகளுக்கு மாணவர்களை வர தேவை இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். அதேநேரம் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே உள்ள மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.
ஆசிரியர் குழுக்கள்
ஆசிரியர்களை குழுக்களாக பிரித்து வெவ்வேறு நாட்களில் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆசிரியர் குழுவும் இரண்டு நாட்களுக்கு பள்ளிக்கு செல்லலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் வருகை
இந்த உத்தரவின்படி பார்த்தால் மாணவர்கள் அவர்கள் விருப்பத்தின் பேரில் வந்தால் போதும் கட்டாயம் கிடையாது என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்கள் எப்போது வருகை தருவார்கள் என்று தெரியாததால், ஆசிரியர்கள் கண்டிப்பாக தங்களுக்குள் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு பள்ளிக்கு செல்வது கட்டாயமாகும். போகப் போக நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்த்து பள்ளிகளுக்கு மாணவர்களை வர சொல்வதை கட்டாயப்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
My school la compalsarey school vara soluvanga sir i'm fell fell fell fell
ReplyDeleteEnaku school ku porathuku romba pidichi iruku sir....
ReplyDeleteUniform or colour dress????
ReplyDelete