Tamil Nadu Lockdown Extended Till October 31
தமிழகத்தில் செப்.30 வரை 8-ம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில், ஊரடங்கை மேலும் ஒரு மாதம் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:
''தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் மார்ச் 24 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங்கிணைப்புக் குழுக்களின் கருத்துகளின் அடிப்படையிலும், பல்வேறு தினங்களில் மாவட்ட ஆட்சியர்களின் காணொலிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், தமிழ்நாட்டில் 30.9.2020 முடிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
5ஆம் கட்டத் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அக்டோபர் 31 வரை நீட்டிப்பு. சுய விருப்பத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு த.செல்லும் அரசாணை நிறுத்திவைப்பு.
5ஆம் கட்டத் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அக்டோபர் 31 வரை நீட்டிப்பு.
29.8.2020 மற்றும் 8.9.2020 ஆகிய தேதிகளில் மத்திய அரசினால் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி , தமிழ்நாட்டில் 1.10.2020 முதல் , அரசு பொதுத் தேர்வு எழுதும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் அனுமதித்து 24.9.2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது . இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் வழங்கிய அனுமதி குறித்து கவனமுடன் செயல்படலாம் என்ற மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின்படியும் , மருத்துவ நிபுணர்கள் அளித்த கருத்துக்களின் அடிப்படையிலும் , தற்போதுள்ள கொரோனா நோய்ப்பரவலின் தன்மையை கருத்தில் கொண்டும் , மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய அனுமதிக்கும் அரசாணை தற்சமயம் நிறுத்தி வைக்கப்படுகின்றது . இது குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு உரிய நேரத்தில் அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுக்கப்படும்.
சுய விருப்பத்துடன் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அரசாணை நிறுத்திவைப்பு.
பள்ளிகள், கல்லூரிகள் இயங்குவதற்கு தடை நீட்டிப்பு.