மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு.
Tamil Nadu Government 7.5% internal quota for government school students in medical studies.
சென்னை: மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறிய சட்டமசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர தாமதமானதால் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசு அனுப்பிய சட்ட மசோதா மீது முடிவு எடுக்க மேலும் 4 வார காலம் பிடிக்கும் என்று ஆளுநர் கூறியிருந்தார்.அரசுப் பள்ளி மாணவா்களில் 'நீட்' தோவில் தோச்சி பெறுவோருக்கு, மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா, தமிழக சட்டப் பேரவையில் செப்டம்பா் 15-இல் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவிற்கு கடந்த 45 நாள்களாக ஆளுநர் ஒப்புதல் தராத நிலையில் இதுகுறித்து முடிவெடுக்க தனக்கு 3 முதல் 4 வார கால அவகாசம் தேவை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அடிப்படையாகக் கொண்டு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு வியாழக்கிழமை அரசாணை வெளியிட்டது.
tamil nadu medical college admission 2020 | tamil nadu mbbs admission 2020 prospectus | tamilnadu mbbs application form 2019 | neet tamilnadu state quota counselling | tamil nadu medical counselling 2020 | tamil nadu mbbs counselling 2020 | mbbs admission in tamilnadu government colleges | community wise medical seats in tamilnadu.