Kalvi TV Time Table 2021

TN Kalvi TV Time Table 2021

TN Government School Students TV Program Time Table Published

Kalvi TV Programme  Schedule list. Bridge course மற்றும் work book காணொலிகள் தயாரித்து கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் மற்றும் ஒளிபரப்பு அட்டவணை

இணைப்புப் பாடப்பயிற்சி கட்டகம் ( Bridge Course ) மற்றும் பயிற்சி புத்தகம் ( Work Book ) காணொலிகள் தயாரித்து கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் சார்ந்த குறிப்பு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு கனிவுடன் அனுப்பப்படுகிறது .

Kalvi TV Programme Schedule (22.04.2021 to 10.05.2021)


 (22.04.2021 to 13.05.2021)
 COVID 19 பெருந்தொற்றுக் காரணமாக பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டிருந்த காரணத்தால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்யும் பொருட்டு 11 முதல் IX வகுப்பு மாணவர்களுக்கு இணைப்பு பாடப்பயிற்சி கட்டகமும் , 1 முதல் IX வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சிபுத்தகமும் உருவாக்கப்பட்டுள்ளது . இணைப்புப் பாடப்பயிற்சி புத்தகம் ( Bridge Course ) || முதல் IX வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு தொகுதிகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 


தொகுதி 1 - ல் தமிழ் , ஆங்கிலம் , பாடங்களும் தொகுதி 11 - ல் அறிவியல் , சமூக அறிவியல் பாடங்களும் , கணிதப்பாடமானது இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு முதல் பிரிவு முதல் தொகுதியிலும் இரண்டாம் பிரிவு இரண்டாம் தொகுதியிலும் இடம் பெற்றிருக்கும் . ஒவ்வொரு பாடமும் 10 நாட்கள் பயிற்சி அளிக்கக்கூடிய வகையில் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

பயிற்சி புத்தகம் ( Work Book ) ஒரு பாடத்திற்கு ஒரு புத்தகம் என்ற அடிப்படையில் 1 முதல் IX வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கான பதில்களை  பயிற்சி புத்தகத்திலேயே மாணவர்கள் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணைப்புப் பாடப்பயிற்சி கட்டகம் ( Bridge Course ) பயிற்சி புத்தகம் ( Work Book ) மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை வலுவூட்டவும் , தாமாகவே பயிற்சி ( Practice ) செய்து கற்பதற்கும் பெரிதும் உறுதுணை செய்யும் . தற்போது பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரையின்படி , மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்கட்டமாக இணைப்புப் பாடப்பயிற்சி கட்டகமும் ( Bridge Course ) இரண்டாம் கட்டமாக பயிற்சி புத்தகமும் ( Work Book ) காணொலி வடிவில் தயாரிக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.