TN 12th Supplementary Exam Time Table 2021

TN 12th Supplementary Exam Time Table 2021

12th Supplementary Exam Time table - August 2021

12th Public Exam Time Table 2021 - August

 செய்திக் குறிப்பு
2020-2021-ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களுக்கு 19.07.2021 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அரசாணை (நிலை) எண். 105, பள்ளிக் கல்வி (அ.தே) துறை, நாள்.12.07.2021-ல், இத்தேர்வு முடிவுகளில் மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பினால் பன்னிரெண்டாம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட அரசாணையின் அடிப்படையில், 2020-2021-ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களுக்கு 19.07.2021 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்கள், 23.07.2021 முதல் 27.07.2021 வரையிலான நாட்களில் (25.07.2021 ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் (Service centres) வாயிலாக 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வினை எழுத விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது, மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்துப் பாடத்தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அத்தேர்வர்கள் குறிப்பிட்ட பாடத்தேர்வுகளை மட்டும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க இயலாது. மேலும், தற்போது எழுதவுள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது.

மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களும் மேற்குறிப்பிட்ட நாட்களில் 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுத சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

திறப்பு அனுமதித் (தக்கல்) திட்டம் : 
23.07.2021 முதல் 27.07.2021 வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் (தக்கல்) திட்டத்தில் 28.07.2021 அன்று ஆன்-லைனில் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். (சிறப்பு அனுமதிக் கட்டணம் - ரூ.1000/-). 

அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள்
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் (Government Examinations Service Centres) விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கால அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தேர்வுக் கால அட்டவணையின்படி, 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு நடைபெறும்.

பொதுவான அறிவுரைகள்:
தேர்வர்கள் 2021 துணைத் தேர்வெழுதுவதற்கு விண்ணப்பிக்க சேவை மையங்களுக்கு வரும் பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.
போதிய சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.