10th Science
Refresher Course Answer key TM
Topic 2 பாய்மங்கள்
10th Science Refresher Course Answer key TM Topic
2 பாய்மங்கள். பத்தாம் வகுப்பு அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 1
பாய்மங்கள் வினாக்களும் விடைகளும் / 10TH SCIENCE - REFRESHER COURSE MODULE -
1 - QUESTION & ANSWER TAMIL MEDIUM.
- பத்தாம் வகுப்பு - அறிவியல்
- புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
- பாடத்தலைப்பு 2 : பாய்மங்கள்
மதிப்பீடு:
1. கோடிட்ட இடத்தை நிரப்பவும்
- 1. விசையின் அலகு நியூட்டன் ஆகும்
- 2. எண்மதிப்பும் திசையும் கொண்டுள்ளதால் விசை ஒரு வெக்டார் அளவு ஆகும்.
- 3. நீர்மத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க அதன் மீது செயல்படும் உந்து விசையை அதிகரிக்க வேண்டும்.
- 4. அழுத்தத்தின் S.I அலகு பாஸ்கல் con/ m2 ஆகும்.
- 5. வளிமண்டலத்தில் காற்றினால் ஏற்படும் அழுத்தம் வளிமண்டல அழுத்தம் எனப்படும்.
- 6. திரவங்களின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அழுத்தமும் அதிகரிக்கும்.
- 7. வளிமண்டல அழுத்தத்தை அளவிட உதவும் கருவி பாதரசமானி ஆகும்.
- 8. காற்றழுத்த மானியைக் கண்டறிந்தவர். டாரிசெல்லி ஆவார்.
- 9. பழரசம் அருந்தப்பயன்படும் உறிஞ்சு குழல் வளிமண்டல அழுத்தத்தால் வேலை செய்கிறது
- 10. மழைத்துளிகள் இயற்கையாகவே கோள வடிவத்தைப் பெற்றிருப்பதற்கு காரணம் நீரின் பரப்பு இழு விசையாகும்
II. சரியா? தவறா? கூறுக
1. நீரியல் அழுத்தி பாஸ்கல் விதி தத்துவத்தின் அடிப்படையில் செயலபடுகிறது.
விடை : சரி
2. நீரின் அடர்த்தி சமையல் எண்ணெயின் அடர்த்தியை விட குறைவு
விடை : தவறு
3. நன்னீரை விட உப்பு நீர் அதிகமான மிதப்பு விசையை ஏற்படுத்தும்.
விடை : சரி
4. திரவமானது கொள்கலனின் அடிப்பாகத்தில் மட்டுமல்ல அதன் சுவர்களின் மீதும் அழுத்தத்தை செலுத்துகிறது.
விடை : சரி
5. ஒருபொருளின் எடைமிதப்புவிசையைவிட அதிகமாக இருந்தால் அப்பொருள் மூழ்கும்.
விடை : சரி