10th Social Science
Refresher Course Answer key TM
Topic 4 பிரெஞ்சு புரட்சி - புரட்சிக்கான
காரணங்கள் மற்றும் விளைவுகள்
10th Social Science Refresher Course Answer key Topic 4 பிரெஞ்சு
புரட்சி - புரட்சிக்கான காரணங்கள் மற்றும் விளைவுகள், 10th Social Science
Refresher Course Answer key Tamil Medium Topic 4. பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 4,
பிரெஞ்சுப் புரட்சி - வினாக்களும் விடைகளும் / 10TH SOCIAL SCIENCE -
REFRESHER COURSE MODULE 4 QUESTION & ANSWER.
- பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்
- புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
- பாடம் - 4 பிரெஞ்சு புரட்சி - புரட்சிக்கான காரணங்கள் மற்றும் விளைவுகள்
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. பிரெஞ்சு தலைவர்களின் சரியான கால வரிசையைக் கண்டுபிடி.
அ) பதினான்காம் லூயி - நெப்போலியன்- ரோபஸ்பியர்
ஆ) ரோபஸ்பியர் - நெப்போலியன் - பதினான்காம் லூயி
இ) பதினான்காம் லூயி - ரோபஸ்பியர் -
நெப்போலியன்
ஈ) நெப்போலியன் - பதினான்காம் லூயி
- ரோபஸ்பியர்
விடை : இ ) பதினான்காம் லூயி - ரோபஸ்பியர் - நெப்போலியன்
2. பிரெஞ்சு புரட்சியின் முக்கிய விளைவாக கருதுவது
அ) அரசர் வரம்பற்ற அதிகாரம் பெற்றார்.ஆ) மதகுருமார்கள் அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்தினர்.
இ) நடுத்தரவர்க்கம் அரசியல் செல்வாக்கை பெற்றது.
ஈ) வரிச்சுமை கீழ்வர்க்க மக்களால் சுமக்கப்பட்டது.
விடை: இ ) நடுத்தரவர்க்கம் அரசியல் செல்வாக்கை பெற்றது.
3. பிரெஞ்சு புரட்சிக்கு முக்கிய காரணமாக கருதுவது
அ) வரி கட்டமைப்பில் ஏற்ற தாழ்வுகள்.ஆ) வணிகத்தின் பொருளாதார வெற்றி
இ) ஐரோப்பாவின் கண்ட அமைப்பு
ஈ) பாஸ்டன் தேநீர் விருந்து
விடை : அ ) வரி கட்டமைப்பில் ஏற்ற தாழ்வுகள்.
4 ) பிரெஞ்சு புரட்சிக்கு முன்னர் பிரான்சு மக்கள் எதன் அடிப்படையில் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தனர் ?
அ) கல்வி நிலைஆ) புவியியல் பகுதி
இ) சமூக வர்க்கம்
ஈ) மத நம்பிக்கை
விடை : இ ) சமூக வர்க்கம்
5. அமெரிக்க மற்றும் பிரெஞ்சு புரட்சிகள் உலக வரலாற்றில் திருப்பு முனையாக இருந்தன. ஏனெனில் இந்த புரட்சிகளின் முடிவுகள் -------
அ) அடிமைத் தனத்தை ஒழித்தது.ஆ) ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை எதிர்பார்க்கும் மக்களை ஊக்கப்படுத்தியது.
இ) மேற்கு அரை கோளத்தில் ஐரோப்பிய செல்வாக்கின் முடிவை குறித்தது.
ஈ) வலுவான சர்வதேச அமைதி காக்கும் அமைப்புகளின் தேவையை குறித்தது
விடை : ஆ ) ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை எதிர்பார்க்கும் மக்களை ஊக்கப்படுத்தியது.