11th Tamil
Refresher Course Answer key
Topic 1 மொழியின் சிறப்புகள்
11th Tamil Refresher Course Answer key Topic 1 மொழியின் சிறப்புகள். 11th Tamil Refresher Course Answer key 2021-2022. 11th Standard Tamil Refresher Course Module Answer key. TN Government Announced Refresher Course Module Books 2021-2022. TN 11th Standard All Subjects Refresher Course Module Books Download PDF. 11th Refresher Course Module Books Tamil Medium and English Medium Book Download PDF. Bridge Course Books. Bridge Course Book For 11th Standard.
11 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 1 மொழியின் சிறப்புகள் வினாக்களும் விடைகளும்.
11th Tamil Refresher Course Answer key செயல்பாடு 1 மொழியின் சிறப்புகள்
11th Tamil Refresher Course 1. மொழியின் சிறப்புகள் Answer key 2021-2022
மதிப்பீடு
1. முத்தமிழ் தொகைச்சொல்லை விளக்குக.
முத்தமிழ் - மூன்று + தமிழ்
- இயற்றமிழ்
- இசைத்தமிழ்
- நாடகத்தமிழ்
இயற்றமிழ் : இயல்பாக எழுதப்படுவதும் , பேசப்படுவதுமாகிய தமிழை இயல் என்கிறோம்.
சான்று: இருவகை வழக்கிலும் உள்ள செய்யுளும் , வசனமும் அடங்கிய நூல்களின் தொகுதி.
இசைத்தமிழ்: பண்ணோடு கலந்தும் , தாளத்தோடு கூடியும் இசைக்கப்படுவது இசைத்தமிழ் ஆகும்.
சான்று :
பண்களால் ஆகிய பாடல்கள் கீர்த்தனங்கள் , வரிப்பாட்டு , சிந்து , ஆனந்தக் களிப்பு , கும்மி , தெம்மாங்கு .
நாடகத் தமிழ் :
இயற்றமிழும் , இசைத்தமிழும் கலக்க நாடகத் தமிழ் பிறக்கும்.
சான்று : மனோன்மணியம்
2. பதினெண் மேற்கணக்கு நூல்கள் யாவை?
எட்டுத்தொகை , பத்துப்பாட்டு நூல்களை பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர்.
எட்டுத்தொகை நூல்கள் :
- 1. நற்றிணை
- 2. குறுந்தொகை
- 3. ஐங்குறுநூறு
- 4. பதிற்றுப்பத்து
- 5. பரிபாடல்
- 6. கலித்தொகை
- 7. அகநானூறு
- 8. புறநானூறு
பத்துப்பாட்டு
- 1 ) திருமுருகாற்றுப்படை
- 2 ) பொருநராற்றுப்படை
- 3 ) சிறுபாணாற்றுப்படை
- 4 ) பெரும்பாணாற்றுப்படை
- 5 ) முல்லைப்பாட்டு
- 6 ) மதுரைக்காஞ்சி
- 7 ) நெடுநல்வாடை
- 8 ) குறிஞ்சிப்பபாட்டு
- 9 ) பட்டினப்பாலை
- 10) மலைபடுகடாம்
3. ஐம்பெருங்காப்பியங்களைக் கூறுக.
- 1 ) சிலப்பதிகாரம்
- 2 ) மணிமேகலை
- 3 ) குண்டலகேசி
- 4 ) வளையாபதி
- 5 ) சீவகசிந்தாமணி
4. பாரதியின் படைப்புகளைப் பட்டியலிடுக.
- பாஞ்சாலி சபதம்
- பாப்பா பாட்டு
- கண்ணன் பாட்டு
- குயில் பாட்டு மற்றும் பல.