12th Standard
Commerce Refresher Course
Answer Key Tamil Medium
Topic 18. வழங்கல் வழிகள்
12th Commerce Refresher Course Answer Key Topic 18. வழங்கல் வழிகள். 12th Commerce Refresher Course Answer Key Tamil Medium. 12th Commerce Refresher Course Answer Key TM & EM, 12th Refresher Course Answer Key. 12th Standard all subject Refresher Course day planner 2021-2022 Download PDF.
12ம் வகுப்பு வணிகவியல் புத்தாக்கா பயிற்சிக் கட்டகம் 18. வழங்கல் வழிகள் வினா விடை கையேடு
12th Commerce Refresher Course Answer Key TM & EM
12th Commerce Refresher Course Answer Key Topic 18
மதிப்பீட்டு வினா விடைகள்:
1.வழங்கல் வழிகள் குறித்து நீவிர் அறிவது யாது?
- வழங்கல் வழியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடைநிலையர் விநியோகப் பணிகளைச் செய்தால் மறைமுக வழங்கல் வழியாகும். கோடிக்கணக்கான நுகர்வோரைப் பொருட்கள் சென்றடைய இடைநிலையர் உதவுகின்றனர்.
- வழங்கல் வழி என்பது உற்பத்தி செய்யப்பட்ட பொருள் உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோரைச் சென்றடைய உதவும் பாதை ஆகும். இடைநிலையர் இன்றி பொருட்களை நேரடியாக விநியோகித்தால் அது நேரடி வழங்கல் வழியாகும்.
- வழங்கல் வழி மூலமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் நுகர்வோரைப் பொருட்கள் சென்றடைகிறது.
- தொழிற்சாலைப் பொருட்கள், நுகர்வுப் பொருட்கள், அழுகும் தன்மையுடைய பொருட்கள் மற்றும் நீண்ட காலம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்து என வகையான பொருட்களையும் தேவைப்படும் அளவுகளில் தேவைப்படும் நேரத்தில் நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கிறது. பொருட்களை போலவே சேவைகளையும் விநியோகிக்கிறது.
2. நேரடி வழங்கல் வழியின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் பற்றி எழுதுக.
நன்மைகள்:- இடைநிலையர்கள் இன்றி ற்பத்தியாளர்கள் நேரடியாக நுகர்வோரின் வீட்டிற்கே சென்று விற்கின்றனர்.
- வாடிக்கையாளர்கள் தபால் மூலமாகவோ, கைபேசி வாயிலாகவோ தனக்கு தேவையான பொருட்களைப் பெறுதல்
- உற்பத்தியாளர்கள் இணையம் மூலம் வலைதளங்களை உருவாக்கி தனது சந்தை அளவை அதிகரிக்கின்றனர். இதன் மூலம் விற்பனை அளவினை அதிகரித்து அதிக இலாபத்தை பெறுகின்றனர்.
- உலகம் முழுவதும் நுகர்வோர்கள் விரவி உள்ளனர். நுகர்வோர்களை ஒப்பிடுகையில் உற்பத்தியாளர்களின் அளவு குறைவே. எனவே இடைநிலையர்கள் இன்றி அனைத்து நுகர்வோர்களையும் கவர்வது கடினம்.
- நேரடி வழங்கல் வழியில் இடைநிலையர்களை தவிர்ப்பது மிகப் பெரிய குறைபாடாக பார்க்கப்படுகிறது.
3.உற்பத்தியளார்களுக்கு மொத்த வியாபாரிகள் ஆற்றிடும் சேவைகள் யாது ?
பேரளவு நடவடிக்கையின் மூலம் சிக்கனம்- மொத்த வியாபாரி உற்பத்தியாளர் செய்தப் பொருட்களைப் பெருமளவில் வாங்கிக் கொள்வதால் உற்பத்தியாளர் பெருமளவு உற்பத்தியில் ஈடுபட முடிகிறது.
- மொத்த வியாபாரி உற்பத்தியாளர் உற்பத்தி செய்த பொருட்களை வாங்கித் தமது பண்டகச் சாலையில் இருப்பு வைத்திருப்பதால் உற்பத்தியாளர் உற்பத்தி செய்தப் பொருட்களைப் பண்டகக் காப்பிடுதல் என்ற மிக முக்கிய பணியிலிருந்து விடுவிக்கப் பெறுகிறார்.
- மொத்த வியாபாரி உற்பத்தியாளருக்கு முன்பணம் வழங்குகிறார். உற்பத்தியாளர் உற்பத்தி செய்தவுடன் பொருட்களை வாங்கிக் கொள்கிறார்.
- உற்பத்தியாளர் பொருட்களை உற்பத்தி செய்தவுடன் மொத்த வியாபாரி வாங்கிக் கொள்வதால் பொருட்களை இருப்பு வைத்தல், பொருட்களின் தேவையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றில் இருந்து உற்பத்தியாளர் விடுவிக்கப்படுகிறார் பருவகாலத் தேவைகளில் ஏற்படும் மாற்றங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறா
- உற்பத்தியாளருக்கும் சில்லரை வியாபாரிக்கும் இடையே இடையீட்டாளராகச் செயல்பட்டு அவர்களை இணைக்கிறார்.
4.வழங்கல் வழியில் உள்ள முதல் இடைநிலையர் யார் ?
- வழங்கல் வழியில் உள்ள முதல் இடைநிலையர் மொத்த வியாபாரிகள் ஆவர்.
5. பொருட்கள் அதிகமான பனைக்கு எந்த வழங்கல் வழிமுறை உதவும் உனது கருத்தை எழுதுக.
- பொருட்கள் அதிகமான விற்பனைக்கு இடைநிலையர் அடிப்படையாகக் கொண்ட வழங்கல் வழிமுறையே சிறந்தது. ஏனெனில் இடைநிலையர்கள் இன்றி நேரடியாக நுகர்வோர்களுக்கு பொருட்களைவிற்க இயலும். மற்றும் நுகர்வோரின் தேவைக்கு ஏற்ப தபால் மற்றும் தொலைபேசி வழி வணிகத்தில் ஈடுபட முடியும்.
- மேலும் மின்னணு வணிகம் மூலம் சந்தையை பெருக்கி வியாபார அளவை அதிகரிக்க முடியும்.