12th Tamil Refresher Course Answer key
Topic 6 | துறை
12th Standard Refresher Course Answer key, 12th Tamil 6 துறை, 12th
Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher
Course, Books, Day Planner, 12th Refresher Course Answers.
12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021-2022 , கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் - 6. துறை - வினாக்களும் விடைகளும்
12th Tamil Refresher Course Answer key தலைப்பு 5 - துறை
Class: 12 | வகுப்பு - 12
Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் | 2021 - 2022
Topic : 6 துறை
- கற்றல் விளைவுகள் ,
- கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள்
- மதிப்பீடு வினாக்களும் , விடைகளும்.
தலைப்பு : 6 துறை
மதிப்பீடு
1. துறை என்றால் என்ன?
- ' துறை ' என்பது ஒரு சிறிய பிரிவு அல்லது பகுப்பு .
- திணையின் உட்பிரிவு 'துறை ' எனலாம்.
- மக்கள் வாழ்க்கைக்கு உரிய நெறி எனவும் கூறலாம்.
2. பொருண்மொழிக்காஞ்சித் துறையைச் சான்றுடன் விளக்கிக் கூறுக.
பொருண்மொழிக் காஞ்சித்துறை
துறை விளக்கம்
மக்களுக்கு நலம் செய்யும்
வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுதல் பொருண் மொழிக்காஞ்சித்
துறையாகும்.
சான்று
புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்
(புறம் - கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி)
சான்று விளக்கம்
தமக்காக உழைக்காமல்
பிறர்க்காகப் பெரிய முயற்சியுடன் உழைப்பவர்கள், தனித்து உண்ண
மாட்டார்கள், பழிக்கு அஞ்சுவர் வெறுத்தல், சோம்பல் இன்றிச்
செயல்படுவார்கள்.
புகழ் வரும் என்றால் தம் உயிரையும்
கொடுப்பர், பழி வரும் என்றால் உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக்
கொள்ளாதவர். எதற்கும் மனம் தளராதவர்கள். இத்தகைய சிறப்புடையோர்
இருப்பதால்தான் இவ்வுலம் இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கிறது.
துறை பொருத்தம்
புகழ் வரும்
என்றால் தம் உயிரையும் கொடுப்பர், பழி வரும் என்றால் உலகம் முழுவதும்
கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளார் என்று மக்களுக்கு நன்மை செய்யும்
வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுவதால் பொருண்மொழிக்காஞ்சித்
துறைக்குப் பொருந்தி வருகிறது.