12th Tamil Refresher Course Answer key Topic 7 அணி இலக்கணம்

12th Tamil Refresher Course Answer key 

Topic 7 | அணி இலக்கணம் 

12th Tamil Refresher Course Answer key  Topic 7 அணி இலக்கணம் , 12th Standard Refresher Course Answer key, 12th Tamil  7 அணி இலக்கணம், 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner 12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021-2022 , கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் -  7. அணி இலக்கணம் - வினாக்களும் விடைகளும்

12th Tamil Refresher Course Answer key

12th Tamil Refresher Course Answer key   தலைப்பு  7 அணி இலக்கணம் 
Class: 12 | வகுப்பு - 12 
Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
Topic :  7 அணி இலக்கணம் 
  • கற்றல் விளைவுகள் , 
  • கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் 
  • மதிப்பீடு வினாக்களும் , விடைகளும்.

தலைப்பு  : 7 அணி இலக்கணம் 

 மதிப்பீடு 

1. அணி இலக்கணம் கூறும் நூல்களை எழுதுக?

அணி இலக்கணம் மட்டும் கூறும் நூல்கள்.

  • தண்டியலங்காரம் 
  • மாறனரங்காரம் 
  • குவலயானந்தம் 
அணி இலக்கணத்தையும் கூறும் நூல்கள்
  1. தொல்காப்பியம் 
  2. வீரசோழியம்
  3. இலக்கண விளக்கம்
  4. தொன்னூல் விளக்கம்
  5. முத்துவீரியம் போன்றவை ஆகும்

2. உவமை அணியைச் சான்றுடன் விளக்குக.

உவமை அணி

          உவமானம் ஒரு தொடராகவும் உவமேயம் மற்றொரு தொடராகவும் அமைய, இடையில் உவமஉருபு வெளிப்படையாக வருவது உவமை அணி ஆகும்.

சான்று
  • சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
  • சுடச்சுட நோற்கிற் பவர்க்கு ,

விளக்கம்
    புடமிடச் சுடுகையில் ஒளிவிடும் பொன்போலத் தவம் இருப்பவரைத் துன்பம் வருத்த வருத்த ஞானம் மெருகேரும்.

உவமானம் : சுடச்சுடரும் பொன்
உவமேயம்: துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
உவம உருபு : போல்

   இக்குறட்பாவில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியவை வெளிப்படையாகப் பயின்று
வந்துள்ளதால் உவமை அணி ஆயிற்று.


3. இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்த்தாக்கப் பக்கு விடும் - இக்குறட்பாவில் பயின்றுள்ள அணியை விளக்குக

உருவக அணி
        உவமையின் தன்மையை உவமேயத்தின் மேல் ஏற்றிக்கூறுவது உருவக அணியாகும்.
உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவக அணி எனப்படும்.

சான்று
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்த்தாக்கப் பக்கு விடும்.

விளக்கம்
     இக்குறட்பாவில், பிறரிடம் இரந்து வாழ்வது பாதுகாப்பற்ற தோணியாகவும், கொடை வழங்காதது பாறையாகவும் உருவகம் செய்யப்பட்டுள்ளன. எனவே இது உருவக அணி ஆயிற்று.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.