12th Tamil Topic 5 Refresher Course Answer key 5 திணை

12th Tamil Refresher Course Answer key 

Topic 5 |  5 - திணை 

12thStandard Refresher Course Answer key, 12th Tamil  5 - திணை, Topic 2 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner 12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021-2022 , கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் -  5 - திணை - வினாக்களும் விடைகளும்

12th Tamil Refresher Course Answer key

12th Tamil Refresher Course Answer key   தலைப்பு  5 - திணை 
Class: 12 | வகுப்பு - 12 
Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
Topic :  5 - திணை 
  • கற்றல் விளைவுகள் , 
  • கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் 
  • மதிப்பீடு வினாக்களும் , விடைகளும்.

தலைப்பு  : 5 திணை 

 மதிப்பீடு 

1. திணை என்றால் என்ன? அவற்றின் வகைகள் ?

    திணை என்றால் ஒழுக்கம் அல்லது இனம் என்று பொருள். உலகில் உள்ள பொருள்கள் அனைத்தையும் திணையின் அடிப்படையில் பகுக்க முடியும்.
    திணையைச் சொல் பாகுபாடு முறையில் 2 வகையாகப் பிரிக்கலாம், இதனைக் கீழ் வகுப்பில் படித்து இருப்பீர்கள். அவை
  1. உயர்திணை, 
  2. அஃறிணை.
மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை
-(நன்னூல் -261)
திணை பொருள் பாகுபாடு முறையில் 2 வகையாகப் பிரிக்கலாம்
  • அகத்திணை (வாழ்வியல்)
  • புறத்திணை (உலகியல்)
அகத்திணை ( வாழ்வியல்):
1. குறிஞ்சி 
2. முல்லை 
3. மருதம் 
4. நெய்தல் 
5. பாலை 
6. கைக்கிளை 
7. பெருந்திணை

புறத்திணை (உலகியல்):

1. வெட்சி 
2. கரந்தை 
3. வஞ்சி 
4. காஞ்சி 
5. நொச்சி 
6. உழிஞை
7. தும்பை
8. வாகை 
9. பாடாண்  
10. பொதுவியல் 
11. கைக்கிளை 
12. பெருந்திணை
  • தொல்காப்பியம் குறிப்பிடும் திணைகள் -7
  • புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் திணைகள் - 12
  • புறநானூற்றில் பாடப்பட்டுள்ள புறத்திணைகள் - 11 (உழிஞை நீங்கலாக)

2. தொல்காப்பியம் குறிப்பிடும் புறத்திணைகள் எத்தனை? அவை யாவை?

தொல்காப்பியம் குறிப்பிடும் புறத்திணைகள் 7.
அவை , 
  1. வெட்சி 
  2. வஞ்சி 
  3. உழிஞை 
  4. தும்பை
  5. வாகை 
  6. காஞ்சி 
  7. பாடாண் 

3. புறநானூறு குறிப்பிடும் புறத்திணைகள் எத்தனை ? அவை யாவை?

புறநானூறு குறிப்பிடும் புறத்திணைகள் 11.
அவை , 
  1. வெட்சி 
  2. கரந்தை 
  3. வஞ்சி 
  4. காஞ்சி 
  5. நொச்சி
  6. தும்பை 
  7. வாகை 
  8. பாடாண் 
  9. பொதுவியல் 
  10. கைக்கிளை
  11. பெருந்திணை
***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.