9th Tamil Refresher Course Answer key Topic 17 கவிதை எழுதுதல்
9th Tamil Refresher Course Answer key Topic 17 கவிதை எழுதுதல். 9th Tamil Refresher Course Answer key 17. 9th Standard Tamil Refresher Course Answer key 9th Standard, Refresher Course Answer Key planner. 9th Tamil, English, Maths, Science, Social Science Refresher Course day planner Tamil Medium.
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021 - 2022 செயல்பாடு 17 கவிதை எழுதுதல்
வினாக்களுக்கு விடையளித்தல்.
வினாக்களுக்கு விடையளித்தல்.
9th Tamil Refresher Course Answer Key for Refresh
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021 - 2022.
- செயல்பாடு 17 கவிதை எழுதுதல்
கவிதை எழுதுதல்
மதிப்பீட்டுச் செயல்பாடு
1. பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கவிதையை நிறைவுசெய்க.
அன்பும் அரவணைப்பும்
ஆணிவேராய் இவளிடம்!
பண்பும் பாசமும்
பசையாய் இவளிடம்!
இன்பமும் ஈகையும்
இதமாய் இவளிடம்!
தன்னலமும் சோர்வும்
தங்காது இவளிடம்!
அன்னையெனும் வடிவில்
இறையே இவளிடம்!
(அரவணைப்பும், பாசமும், ஈகையும், சோர்வும்)
2. கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் ஒவ்வொன்றிலும் இரண்டு முதல் நான்கு வரிகளுக்குள் கவிதை எழுதுக.
உழைப்பு
குனிந்து நிமிர்ந்து
தினமும் உழைத்தேன்.
நிமிர்ந்து நிற்கிறது
என் வாழ்க்கை.
பூமி
உயிரினங்களை
உள்ளங்கையில் தாங்கும்
உருண்டை வடிவ சாமி.
மழை
விண்ணிலிருந்து
மண்ணைத் தொட்டதால்
கண்ணைத் திறந்தன
விதைகள் செடியாக !
மழலை
கருவாய் உருவாகி
பத்துமாதத்தில்
குழந்தையாய் உருமாறி
குடும்பத்திற்கு
குதூகலம் தரும் தேவதை.
3. படத்தைப் பார்த்துக் கவிதை எழுதுக.
மாணவர்கள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களைக் காட்சிக்கேற்ப கவிதையாக எழுதலாமே.