6th Tamil Refresher Course Answer key 13
Topic 13. உரையாடலை எழுதுதல்
6th Tamil Refresher Course Answer key 13. உரையாடலை எழுதுதல். 6th Standard Tamil புத்தாக்கப் பயிற்சி விடைகள் மதிப்பீட்டுச் செயல்பாடு 1. 6th Refresher Course Module Books. 2nd to 12th Refresher Course Book and and Answers. 6th Tamil Refresher Course Answer key Topic 11.
6th Tamil Refresher Course Answer key Topic 13.உரையாடலை எழுதுதல்
6th Tamil Refresher Course Answer key 13
மதிப்பீட்டுச் செயல்பாடு | Topic 13. உரையாடலை எழுதுதல்
- இளமாறன் : தாத்தா இது என்ன?
- தாத்தா : வயிற்றுவலிக்காக நம் வீட்டில் இருந்த மருந்து சரி நேற்று இரவு நீ என்ன சாப்பிட்டாய்?
- இளமாறன் : நேற்று நான் அப்பாவுடன் துரித கடைக்குச் சென்று விரைவு உணவு சாப்பிட்டேன்.
- தாத்தா: நான் நினைத்தது சரிதான். அந்த விரைவு உணவுதான் வயிற்றுவலிக்குக் காரணம்,
- இளமாறன்: ஏன் தாத்தா! விரைவு உணவு இவ்வளவு தீமை தரக்கூடியதா?
- தாத்தா: ஆம், விரைவு உணவில் பயன்படுத்திய எண்ணெயை. திரும்பப் பயன்படுத்துதல்; அதிகக் காரமும் அவ்வுணவில் சேர்க்கப்படும் சில செயற்கைச் சுவையூட்டிகள் போன்றவையும்தான் தீய விளைவுகளை விளைவிக்கும்.
- இளமாறன்: வகுப்பில் ஆசிரியரும் ஏற்கனவே இதைப்பற்றி கூறினார்.
- தாத்தா: இனி மேல் விரைவு உணவு உண்ணக் கூடாது சரியா?
- இளமாறன்: சரி தாத்தா,
ஆ. உரையாடலை நிறைவு செய்க.
(புவி வெப்பமடைதல் பற்றி நண்பர்கள் இருவருக்கு இடையிலான உரையாடல்)
கந்தன் மாலையில் பள்ளியிலிருந்து தாமதமாக வீடு திரும்புகிறான். வழியில் தனது நண்பன் சங்கரைச் சந்திக்கிறான்.—
- சங்கர்: என்ன கந்தா! பள்ளியிலிருந்து இவ்வளவு தாமதமாக வருகிறாய்?
- கந்தன்: வெயில் அதிகமாக இருந்ததால் பள்ளியிலுள்ள மரத்தடியில் அமர்ந்து வீட்டுப்பாடம் எழுதிவிட்டு வருகிறேன்.
- சங்கர்: ஆமாம். நீ சொல்வது உண்மைதான். நேற்று முனியாண்டி தாத்தா வெயில் தாங்காமல் மயங்கி விழுந்துவிட்டார்.
- கந்தன்: பூமி அதிக சூடாகி விட்டதுபோல....
- கந்தன்: பூமி அதிக சூடாகி விட்டதுபோல.....
- சங்கர்: ஆமாம். அதற்குப் பெயர்தான் புவி வெப்பமடைதல் என்று சொல்வார்கள்
- கந்தன்: ஆம்.புவி வெப் மடைதலைப் பற்றி நமது அறிவியல் ஆசிரியர் கூட சென்ற வகுப்பில் விளக்கிக் கூறினார்.நீ அன்றைய நாளில் பள்ளிக்கு வரவில்லை என நினைக்கிறேன்.
- சங்கர்: அதைப்பற்றி எனக்குக் கொஞ்சம் விளக்குகிறாயா?.
- கந்தன்: ஆம்.வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை,தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை உள்ளிட்ட காற்று மாசினாலும்,மரங்களை அதிக அளவில் வெட்டுவதாலும் உலக வெப்பமயமாதல் ஏற்படுகிறது என்று கூறினார்.
- சங்கர்: மிக்க நன்றி நண்பா!