10, 11, 12-ம் வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்பே சிறந்தது! சென்னை ஐகோர்ட் கருத்து

10, 11, 12-ம் வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்பே சிறந்தது! சென்னை ஐகோர்ட் கருத்து


மூன்றாவது அலை தீவிரமாகி வருவதால் 10 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு Onlineல் நடத்தும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து ஆன்லைன் வழியாக வகுப்புகளை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் தடுப்பூசி செலுத்துவதற்காகவே மாணவர்கள் பள்ளிகளுக்கு அழைக்கப்படுவதாக நேரடி வகுப்புகளில் கலந்து கொள்வது கட்டாயம் இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மூன்றாவது அதிகரித்து வருவதால் 10 11 12ஆம் வகுப்புகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்கும் படியும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது இதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களும் பணியாளர்கள் என அனைவரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் கொள்கை முடிவை மீறி பள்ளிகளை மூடும் படி உத்தரவிட முடியாது என்று கூறிய நீதிபதிகள் மூன்றாவதாக ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இறப்பு விவரங்களை என் மனதில் கூறவில்லை என்று கேள்வி எழுப்பினர் மேலும் வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடரக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அபராதம் விதிக்கப் போவதாக நீதிபதிகள் எச்சரித்தனர் இதனையடுத்து வழக்கை வாபஸ் பெறுமாறு மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது எடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவே நேரடி வகுப்புகளுக்கு அழைப்பு விடுத்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் நேரடி வகுப்புகள் நடத்துவது கட்டாயமில்லை, ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது பற்றி பள்ளிகள் முடிவு எடுக்கலாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.