8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!!!!

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு..!!!!



 தமிழகத்தில் வருடந்தோறும் பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவில் திறனாய்வுத் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பாக மாதந்தோறும் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக ஏழ்மை நிலை மாணவர்கள் பயன் பெறுகின்றனர். இதனிடையில் வறுமையின் காரணமாக கல்வி இடைநிற்றல் தவிர்க்கப்படுகிறது. மேலும் கற்றலில் திறமையுள்ள மாணவர்களை கண்டறியும் நோக்கிலும் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு முன்பாக வரும் 23ஆம் தேதி தேர்வு நடைபெற இருந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேர்வு ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை உதவித்தொகை அரசு சார்பாக வழங்கப்படும்.

அதாவது, 9, 10ஆம் வகுப்புகளில் மாதம் 10,000 ரூபாயும், 11ஆம் வகுப்பில் 1250 ரூபாயும், 12ஆம் வகுப்புகளில் மாதம் 2,000 ரூபாயும், மேலும் மேற்படிப்பு மற்றும் ஆய்வு படிப்புகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். தற்போது தேர்வுக்கான ஹால் டிக்கெட்டானது வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.