ஆசிரியர் தகுதித்தேர்வு காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்கும் முறை முழு விவரம் இதோ!

ஆசிரியர் தகுதித்தேர்வு காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்கும் முறை முழு விவரம் இதோ....!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வும் நடைபெறாமல் இருந்தது ஆனால் தற்போது நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்துவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே 2022 ஆம் ஆண்டு காலியாக உள்ள 7000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வாணையம் குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது. அதன்படி 
  • 3,902 இடைநிலை ஆசிரியர்கள்
  • 1,087 பட்டதாரி ஆசிரியர்கள் 
  • என மொத்தம் 4,989 பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும்.

அதனைத் தொடர்ந்து SCERT 167 விரிவுரையாளர் தேர்வு ஜூன் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் எனவும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1337 உதவி பேராசிரியர்கள் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணி களுக்கு நவம்பர் இறுதியில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டு தாளாக நடைபெறும் எனவும் அதோடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டியாளர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டமும், B.Ed முடித்திருக்க வேண்டும். அதோடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் NET/ SLET/ SET / SLST / CSIR / JRF தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.