4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்?

ஹெல்மெட் கட்டாயம்- மத்திய அரசு அறிவிப்பு!



இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
40 கி.மீ வேகத்தில் தான் பயணிக்க வேண்டும் - மத்திய அரசு

மத்திய அரசு திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதி 2023 பிப்ரவரி 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கும் இருசக்கர வாகனத்தை மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் இயக்கக் கூடாது எனவும், இருசக்கர வாகனத்தில் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.