தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு 2022 - 2023 கல்வியாண்டு பள்ளிகள் திறப்பு!
பள்ளி மாணவர்களுக்கு இந்தாண்டு கோடை விடுமுறை முடிந்து எப்போது பள்ளிகள் ஆரம்பமாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஜூன் 13 ஆம் தேதி முதல் 2022 – 2023 கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
பள்ளி துவக்கம்:
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தற்போது தான் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மாணவர்களுக்கு பொது தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை. 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்றது மற்றும் கல்லூரி முதலாமாண்டு மாணவர் சேர்க்கை 10 மற்றும் 11 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்றது.
இந்தாண்டு கண்டிப்பாக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். அதன்படி 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 30 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 31 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 28 ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறவுள்ளது. மேலும், 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது.
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொது தேர்வு எதுவும் கிடையாது. ஆனால் இவர்களுக்கும் மே 13 ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும். இதனால் 1 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை ஒரு மாதம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஜூன் 13 ஆம் தேதி முதல் 2022 – 2023 கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.