தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பொதுத்தேர்வுக்கு பிறகு ஜூன் 13 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை:
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகின்ற நிலையில் பள்ளிகள் திறக்க ஆரம்பித்து மாணவர்கள் சென்று வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு கண்டிப்பான முறையில் பொதுத் தேர்வுகள் நடக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் முனைப்புடன் படித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து முன்னதாக பொதுத் தேர்வுகளுக்கான தேதிகள் பள்ளிக்கல்வித்துறையின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க உள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 23ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு ஜூன் 17 ம் தேதியும் வெளியிடப்படும். மேலும் அடுத்தாக, 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் 13 ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 13 ஆம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மே மாதம் 13 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்பட உள்ளது. அதன் பின்னர் 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டு, வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி முதல் தொடங்கும் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையை உற்சாகமாக வரவேற்க காத்துக் கொண்டுள்ளனர்.