தமிழகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டில் கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பின் அரசு ஊரடங்கில் நிறைய தளர்வுகள் அளித்தாலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு குறைந்ததையடுத்து பல மாதங்கள் சென்ற பிறகு, கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இந்த ஆண்டு கண்டிப்பாக நடத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். இந்நிலையில் பொதுத் தேர்தலுக்கான கால அட்டவணைகள் வெளியானது. இத்தேர்வானது மே 5ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகளும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்குள் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் குறித்த தேதிகளையும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மே மாதம் இறுதித் தேர்வுகள் நடக்க உள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்து உள்ளார். மேலும் தேர்வுகள் முடிந்த பின் விடுமுறையும் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது