தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருநாள் விடுமுறை அறிவிப்பு மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
திருவாரூர் மாவட்டத்தில் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு மக்கள் சிறப்பாக திருவிழாவை கொண்டாடும் பொருட்டு மார்ச் 15ம் தேதி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள புகழ்பெற்ற திருத்தலங்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாக்களில் பங்கேற்க அம்மாவட்ட மக்கள் தவிர்த்து வெளி மாவட்ட மற்றும் மாநில மக்களும் வருகை புரிவர். இதனை முன்னிட்டு மக்கள் சிறப்பாக விழாவை கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் உள்ளூர் விடுறையை அறிவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பு மாதம் கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 2ம் தேதி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு 2022 - 2023 கல்வியாண்டு பள்ளிகள் திறப்பு!
அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரியில் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி மாத கொடை விழாவை முன்னிட்டு கடந்த 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தியாகராஜர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2022ம் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயில் திருவிழா மார்ச் 15ம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது.
இத்திருத்தலம் , நாயன்மார்களால் பாடப் பெற்ற சிறப்பு தலங்களில் ஒன்று பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் திகழ்கிறது. இந்த திருவிழாவில் ஆழித்தேரோட்டம் முக்கிய நிகழ்வாகும். இந்த தேரை காண ஏராளமான மக்கள் கோவிலுக்கு வருவர். இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் மார்ச் 15ம் தேதி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளது.