March 22 Local Holiday - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அரசு அறிவிப்பு!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் திருவிழா வரும் மார்ச் 22 ஆம் தேதி நடக்க இருப்பதால் அம்மாவட்டத்திற்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பண்ணாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு குண்டம் இறங்குவார்கள். கடந்த மார்ச் 7 ஆம் தேதியில் இருந்து இந்த திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மார்ச் 21ஆம் தேதி தீக்குண்டம் வார்ப்பு நிகழ்ச்சியும், 22 ஆம் தேதி அதிகாலை குண்டம் இறங்கும் விழாவும் நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக பண்ணாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெறவில்லை.
தற்போது ஓரளவுக்கு தொற்று குறைந்துள்ளதால் எக்கச்சக்கமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 22 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்ணி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஏதேனும் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த தேர்வு வழக்கம் போல நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்கள் குறைவான பணியாளர்களுடன் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10th 2nd Revision Model Question Paper
12th 2nd Revision Model Question Paper
இந்த விடுமுறையை ஈடுகட்ட மார்ச் 26 (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. மேலும் மார்ச் 21, 22, 23 ஆகிய நாட்களில் பண்ணாரியம்மன் கோவிலின் குண்டம் மற்றும் மறுபூஜை நடக்க இருப்பதால் இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, கோபி, கவுந்தப்பாடி, பவானி, சத்தியமங்கலம், புளியம்பட்டி, மைசூரு, நம்பியூர், பவானிசாகர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்ணி அறிவித்துள்ளார்.