TN Budget 2022 தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல்!

TN Budget Live Updates 2022 தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல்!

தமிழகத்தில், அடுத்து வரவிருக்கும் 2022 - 2023ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் தனது உரையை தொடங்கி உள்ளார். இதில் பல புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.



பட்ஜெட் தாக்கல்

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி பெரும் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. அந்த வகையில் தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆகஸ்ட் 13ம் தேதியன்று முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, கூட்டுறவு சங்கங்களின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2,756 கோடி தள்ளுபடி உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

அதே போல காவல் துறைக்கு ரூ.8,930 கோடி, பொது விநியோக திட்டத்திற்கு ரூ.8,438 கோடி, நெடுஞ்சாலை துறைக்கு ரூ.18,899 கோடி, மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.18,933 கோடி, பள்ளி கல்வித்துறைக்கு ரூ.32,560 கோடி, உயர் கல்வித்துறைக்கு ரூ.5,369 கோடி என நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்து வரவிருக்கும் 2022-2023ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து நிதியமைச்சர் தனது உரையை தொடங்கி உள்ளார்.

இந்த முறையும் காகிதம் இல்லாத தொடுதிரை கணினி முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட்டில், தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்றைய பேரவை கூட்டதின் முடிவில் சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.

இக்கூட்டத்தில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வது மற்றும் பட்ஜெட் மீது விவாதம் நடத்தும் நாட்கள் குறித்து முடிவு செய்யப்படும். இந்த கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, கொறடா கோவி.செழியன் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர். இப்போது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் மக்களிடையே பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

LIVE UPDATES:

  • தமிழகத்தில் வரும் நிதியாண்டில் மாநில மொத்த உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 4.61%லிருந்து 3.80 ஆக குறையும்.
  • வருவாய் பற்றாக்குறை கடந்த ஓராண்டில் ரூ.7 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • பெரியாரின் சிந்தனைகள் 21 மொழிகளில் வெளியிடப்படும்.
  • GST இழப்பீடு நடைமுறை முடிவுக்கு வந்தபின் 20 ஆயிரம் கோடி வரி இழப்பை தமிழக அரசு சந்திக்கும் என அமைச்சர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
  • முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.4,816 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
  • நீர்நிலை மற்றும் அரசு நிலங்களை மீட்கும் பணிகளுக்காக ரூ.50 கோடி ரூபாய், வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கொற்கையில் ரூ.5 கோடியில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ளப்படும். விழுப்புரம், ராமநாதபுரத்தில் 10 கோடி ரூபாயில் தொல்பொருட்களை வைக்க அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது.
  • அரசு அல்லாத பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகங்கள் வழங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
  • சுய உதவிக்குழுக்களுக்கள் மற்றும் விவசாயிகளுக்கான பயிர்கடன் வழங்க ரூ.4,130 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.4,816 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
  • சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரத்தை தடுக்க சிறப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.
  • தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்காக ரூ.496 கோடி, வானிலை முன்னறிவிப்பு கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
  • வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி, தமிழக அரசின் நீர்வளத்துறைக்கு ரூ.7,338.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறைக்கென ரூ.849 கோடி நிதி ஒதுக்கீடு.
  • சென்னை அருகே தாவரவயில் பூங்கா ரூ.300 கோடியில் அமைக்கப்படும்.
  • புதிதாக 18000 வகுப்பறைகள் கட்ட ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • தமிழகத்தில் புதிதாக 7 வணிக நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படும். நீதி நிர்வாகத்துறைக்காக ரூ.1.461.97 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
  • பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,895.89 கோடி.
  • பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் உணவு மானியமாக ரூ.7500 கோடி.
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.293.26 கோடி.
  • ஒலிம்பிக் போட்டி பயிற்சிக்கு ரூ.25 கோடி.
  • முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டதிற்கு ரூ.1,547 கோடி நிதி ஒதுக்கீடு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.