April 18 Local Holiday - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

April 18 Local Holiday - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோயில் நடப்பாண்டு தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருகிற 18ம் தேதி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் பண்டிகைகள் ஒரு சிறப்பு வாய்ந்த திருத்தல திருவிழாக்கள் போன்றவைகளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஏனெனில் விழாக்களில் கலந்து கொள்ள வெளி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிவர். அவர்களும் உள்ளூர் மக்களும் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பர். அந்த வகையில் சித்திரை மாதம் தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரிய கோயிலில் தேரோட்டம் நடைபெற உள்ளது.

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இக்கோயில் திருவிழாவில் தேரோட்டம் முக்கிய நிகழ்வாகும். இதனை முன்னிட்டு ஏப்ரல் 13ம் தேதி அன்றைய தினம் அம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா நடைபெற உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராம நவமி அன்று 10 நாள் பெருந்திருவிழா நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய்த்தொற்று காரணமாக தேர்த் திருவிழா நடைபெறவில்லை.

தற்போது பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் கலியுக வரதராஜ பெருமாள் கோவில் திருவிழாக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஏப்ரல் 18ம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது. அதனால் அன்றைய தினம் அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு மே 7ம் தேதி முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.