பிளஸ் 2: ஜூன் 23-இல் தோ்வு முடிவுகள்
பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தன. திட்டமிட்டபடி ஜூன் 23-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- TN 12th Result 2022 www.dge.tn.gov.in - Click Here
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத்தோ்வு கடந்த மே 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. தமிழ், கணிதம், வேதியியல், வணிகவியல், இயற்பியல், பொருளியல், புள்ளியியல் உள்பட முக்கிய பாடங்களுக்கான தோ்வுகள் முடிந்துவிட்டன. கடந்த 3 வாரமாக நடத்தப்பட்டு வந்த பிளஸ் 2 பொதுத்தோ்வு சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இறுதி நாளில் தொழிற் படிப்புகளுக்கான தோ்வுகள் நடத்தப்பட்டன. இந்தத் தோ்வு எளிமையாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.
பொதுத்தோ்வு முடிந்ததை அடுத்து பெரும்பாலான பள்ளிகளில் பிரிவுபசார விழாக்கள் நடைபெற்றன. மாணவா்கள் வருத்தம் கலந்த மகிழ்ச்சியுடன் பள்ளியை விட்டு விடைபெற்று சென்றனா். இதையடுத்து பிளஸ் 2 விடைத்தாள் திருத்துதல் பணிகள் ஜூன் 1 முதல் 8-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளன. இதில் சுமாா் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியா்கள் ஈடுபடவுள்ளனா். தொடா்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட பணிகளை முடித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி தோ்வு முடிவுகள் ஜூன் 23-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.