தமிழகம் முழுவதும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்!
தமிழகத்தில் வருகிற ஜூன் 13 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தமிழக அரசு அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக தற்போது நோட்டு, புத்தகங்கள் அனுப்பும் பணி நல்முறையில் நடந்து முடிந்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகளவில் உயிர்சேதத்தையும், பொருளாதார சேதத்தையும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியது. இப்படி இருக்கையில் இந்த ஆண்டு வைரஸ் தாக்கம் குறைந்து எல்லா நிலைமையும் பழைய படி மாறி, பள்ளிகள் அனைத்தும் செயல்பட்டு நல் முறையில் கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது வருகிற ஜூன் 13 அன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை குறித்து கலெக்டர் அரவிந்த் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அது போல நேற்று முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்தும், பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை குறித்தும் ஆலோசித்தனர். இதற்கிடையே பள்ளிகள் திறந்தவுடனேயே மாணவர்களுக்கு நோட்டு மற்றும் புத்தகங்கள் வழங்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிகளுக்கும் நோட்டு மற்றும் புத்தகங்கள் அனுப்பும் பணி நேற்று தொடங்கப்பட்டது.
அதன்படி குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மட்டுமே 806 இருப்பதால் அங்கு அதிகளவு நோட்டு புத்தகங்கள் அனுப்ப வேண்டியிருக்கும். அதனால் முதலாவதாக கன்னியாகுமரிக்கு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான நோட்டு, புத்தகங்கள் அனுப்பும் பணி நேற்றிலிருந்து ஆரம்பமாகியது. அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 447 புத்தகங்களும், ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 608 நோட்டுகளும் வழங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு இந்த நோட்டு மற்றும் புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் அனுப்பி வைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.